--- --:--:-- --

இனி ஆதாரில் எளிதாக செல்போன் எண், முகவரியை மாற்றலாம்..!

4

ஆதாரில் செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளும் அம்சங்களுடன் புதிய ’ஆதார்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. UID சேவைகளை எளிதாகவும், பாதுகாப்பாகவும் அணுகுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய ’ஆதார்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதாரையும் இந்த செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் விவரங்களை எளிதாக பகிரலாம் எனவும், ஆதார் விவரங்களை யாரெல்லாம் அணுகலாம் என்பதை பயனாளர்களே முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல, கண் கருவிழி மற்றும் கைரேகை உள்ளிட்ட தகவல்களை எந்தெந்த சேவைகளுக்கு வழங்கலாம் என்பதையும் பயனர்கள் முடிவு செய்ய முடியும். ஆதாரில் செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எந்த நேரத்திலும் இந்த செயலி மூலம் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், செல்போன் எண், முகவரி மாற்றத்திற்காக ஆதார் சேவை மையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் இனி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon