--- --:--:-- --

விஜய்க்கு சரியான வழிகாட்டி அவரது தந்தை – பி.டி.செல்வகுமார்

3

பிரசாந்த் கிஷோர் அட்டக்கத்தி எனவும், அவரை நம்பினால் விஜயால் வெற்றி பெற முடியாது என்றும் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ’புலி’ திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளருமான பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், விஜய்க்கு பயிற்சி அளித்து வளர்த்தவர்களில் தானும் ஒருவர் எனவும், விஜய்க்கு சரியாக வழிகாட்டுவதற்கு முழு தகுதி அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு இருப்பதாகவும் கூறினார். மேலும், விஜயை சுற்றி இருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.செல்வகுமார், “பிரசாந்த் கிஷோர் பிகாரைச் சேர்ந்தவர். அவரால் தமிழ்நாட்டில் 2 ஓட்டு கூட வாங்க முடியாது. அவர் ஒரு அட்டக்கத்தி போல. பிகாரில் 238 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் ஏன் அவரால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.

அவரை நம்பினால் விஜயால் வெற்றி பெற முடியாது. மக்கள் பிரச்னைகளை அறிந்து, அவர்களோடு இணைந்து விஜய் பணியாற்ற வேண்டும்” என அவர் தெரிவித்தார். மேலும், விஜய்க்கு சரியான வழிகாட்டும் முழு தகுதி அவரது தந்தைக்கு தான் இருப்பதாகவும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon