--- --:--:-- --

தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்: ஆர்.பி.உதயகுமார்

4

தினகரன் உடன் இருந்த செந்தில் பாலாஜி, மாரியப்பன் கென்னடி, உசிலம்பட்டி மகேந்திரன் உள்ளிட்ட நபர்கள் எல்லாம் ஏன் அவரை விட்டு விலகி வெளியே வந்தார்கள்? செந்தில் பாலாஜியை ஏன் திமுகவுக்கு அனுப்பி வைத்தீர்கள்? உங்களை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள்.

 

அதிமுக கட்சியை அபகரிக்க முயன்றவர் டிடிவி தினகரன். அதிமுகவை ஆட்டைய போட பார்த்தவர் தினகரன். தினகரனின் பருப்பு எடப்பாடி பழனிசாமியிடம் வேகாது. அந்த இயலாமையின் காரணமாக இன்று ஏதேதோ பேசுகிறார் தினகரன். டிடிவி தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரோ என்ற கவலை தம்பிமார்களான எங்களுக்கு உள்ளது.

 

10 ஆண்டு காலம் ஒதுக்கி வைத்ததால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதோ என்ற மிகப்பெரிய கவலை எங்களுக்கு உள்ளது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon