--- --:--:-- --

திருச்சி கோணக்கரை – குடமுருட்டி சாலை நாளை முதல் தற்காலிகமாக மூடல்..!

6

திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றின் கிழக்குக் கரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை வரும் நவம்பர் 5, 2025 ஆம் தேதி (நாளை) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் திரு. லி. மதுபாலன் அவர்கள் அறிவித்துள்ளார்.

 

 

”திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்.09, உறையூர் முதல் குடமுருட்டி (கோணக்கரை கரூர் புறவழிச்சாலை வரை) பகுதியில், உய்யகொண்டான் ஆற்றின் கிழக்குக் கரைப் பகுதியில் 2.120 கி.மீ. நீளத்திற்குப் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்தப் பணியின் ஒரு பகுதியாக, கோணக்கரை சாலைப் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை 05.11.2025 ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது.

 

உறையூர் முதல் கோணக்கரை மயானம் வரையிலான சாலை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும். மாற்றுச் சாலை: உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணி முடிவுறும் வரை, மூடப்படும் இச்சாலைக்குப் பதிலாக மாற்றுச் சாலையாக அண்ணாமலை நகர் பிரதான சாலையினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon