--- --:--:-- --

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்..!

3

மிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மொத்தம் 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

 

மேலும், பயண நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,710 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து 14 ஆயிரத்து 268 முறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பிற ஊர்களில் இருந்து 6,110 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

 

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக அக்டோபர் 21 முதல் 23 வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகள் என ஆக மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon