அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!
தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியின் படி காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடுக்கப்பட்டது.
காலாண்டு விடுமுறைகள் முடிந்த பின்னர் அக்டோபர் 06 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. காலாண்டு தேர்வுகள் முடிந்து அரையாண்டுத் தேர்வு, டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வு, 23ஆம் தேதி வரை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் விடப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு கூடுதலாக நாளை (அக்டோபர் 03) புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு புதுச்சேரியில் நாளையும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து அக்டோபர் 06 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




