--- --:--:-- --

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய 8 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

1

மயிலாடுதுறையில் அரசின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அந்த மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

மேலும் 271 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உதவி திட்டத்தில் 1,62,396 சகோதரிகள் பயனடைந்துள்ளனர். கச்சத்தீவை மீட்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறேன்.

 

மேலும் இது தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆனால் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கு கூட அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவ மக்களின் நலன் காப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதமர் கச்சத்தீவு விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon