--- --:--:-- --

செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!

5

தூத்துக்குடி, சிப்காட் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெயகொடி மகன் வேல்மணி (வயது 40) மற்றும் சதாசிவம் மகன் பாரதிகுமார்(27) ஆகிய 2 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

 

இவ்வழக்கின் விசாரணை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் குற்றவாளிகளான வேல்மணி மற்றும் பாரதிகுமார் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon