--- --:--:-- --

இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!

2

வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் ஜூலை 1ஆம் தேதி முதல் சோதனை ரீதியாக தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

 

தமிழக ரேஷன் கடைகளில் 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. கார்டில் உள்ள உறுப்பினர்கள் கடைக்கு சென்று விற்பனை முனையக் கருவியில் கைரேகையை பதிவு செய்தால் தான் பொருட்கள் வாங்க முடியும்.மூத்த குடிமக்கள், நடக்க முடியாத அளவு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்பி பொருட்கள் வாங்கலாம்.

 

இதற்காக அவர்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.எனவே மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.இத்திட்டம் சோதனை ரீதியாக வரும் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.

 

முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon