தலையில் அடிபட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கு 7 நாள் ஓய்வு..!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதில் கிரிக்கெட் போட்டியின்போது வீரர்களின் தலையில் பந்துபட்டு அடிபடும்பட்சத்தில், அப்போது ஏற்படும் மூளை அதிர்ச்சியில் இருந்து வீரர் குணமாக அவருக்கு 7 நாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.
இதன்பிறகே மற்ற போட்டியில் அவரை களமிறக்க வேண்டும். மாற்று வீரர் யார் என்பதை போட்டிக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




