கட்டணமில்லா பஸ் பயண அட்டை.. செப்.30 வரை நீட்டிப்பு..!
கட்டணமில்லா பஸ் பயண அட்டைக்கான காலக்கெடு செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களுக்காக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா பஸ் பயண அட்டைகளை புதுப்பித்து தரும் மென்பொருளை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், மார்ச் 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பஸ் பயண அட்டைகள் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




