--- --:--:-- --

அதிமுக நடத்திய போராட்டத்தில் திடீரென வெளியே வந்த பாம்பு..!

2

மா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் மாம்பழங்களின் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், கூழ் தயாரிக்கும் மாம்பழங்களை கொள்முதல் செய்வதிலும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இதனால், மாம்பழங்களின் கொள்முதல் விலையை 5 ரூபாயில் இருந்து 13 ரூபாயாக உயர்த்த வேண்டும், மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.-யை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகளை முன்வைத்துள்ளனர். இதனை நிறைவேற்றக் கோரி கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அதிமுக உண்ணாவிரதப் போராட்டக் களம் முன்பு 2 டன் அளவிற்கு மாங்காய் கொட்டப்பட்டு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. அப்போது, மாங்காய் குவியலில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்தது. அங்கும் இங்கும் அலைந்த பாம்பை, அதிமுகவினர் மாங்காயை வைத்தே அடித்தனர். இதில், பாம்பு உயிரிழந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon