திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்..!
பள்ளிகள் திறந்த பிறகும், திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்காக சுமார் 18 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வைகுண்டம் க்யூ வளாகத்தில் உள்ள அனைத்து பெட்டிகளும் பக்தர்களால் நிரம்பி வழிந்து வெளியே கல் தூண் வரை வரிசை நீண்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 75,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ₹3.93 கோடி உண்டியல் வசூலானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




