AI இருந்தாலும் மனிதர்களும் பணியமர்த்தப்படுவர்: சுந்தர்
AI-ல் அதிக முதலீடுகளை செய்தாலும், 2026 வரை சாஃப்ட்வேர் இஞ்சினியர்களை பணியமர்த்துவது தொடரும் என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
AI மனித வேலைகளுக்கு மாற்றாக இல்லாமல், மனிதர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் ஒரு கருவியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஆல்பபெட் கடந்த 3 ஆண்டுகளில் 12,000க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடதக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




