திருப்பதி மலைப் பாதையில் பாதுகாப்பு அதிகரிப்பு..!
திருப்பதி மலைப் பாதையில் சிறுத்தை நடமாடிய வீடியோ அண்மையில் வெளியானது. இதனால் நடைபாதை வழியாக பக்தர்கள் செல்வதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் வனவிலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஸ்மார்ட் ஸ்டிக்குகள் வழங்கப்பட்டுள்ளன. கேமராக்கள் பொருத்தி வனவிலங்குகள் நடமாட்டமும் கண்காணிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




