கூட்டணிக்கு விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் : சீமான்
தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என சீமான் கூறியுள்ளார். அதே சமயம் தேர்தலில் அதிமுக, தவெக என எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் தனக்கு இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
எனது தலைவர் பிரபாகரனின் குரலை எதிரொலிப்பேன், அதனை கூட்டணியில் உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள். எனது கொள்கை வேறு, அவர்களது கொள்கை வேறு என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




