பரவும் தவறான வீடியோ.. சைபர் க்ரைமில் புகார் அளித்த நடிகை கிரண் ரத்தோட்!

விக்ரமின் ஜெமினி, அஜித் உடன் வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் கிரண் ரத்தோட். ஒருகட்டத்திற்கு பிறகு கிரணுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில் கடந்த பல வருடங்களாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

 

இன்ஸ்டாவில் அவ்வப்போது அவர் வெளியிடும் கிளாமர் போட்டோ மற்றும் வீடியோக்கள் பார்த்து ரசிகர்களே அடிக்கடி ஷாக் ஆகின்றனர்.இந்நிலையில் கிரண் தனது ஆபாச வீடியோவை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் என அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறார்.

 

அது டிஜிட்டல் ஆக மாற்றம் செய்யப்பட்ட வீடியோ எனவும் அவர் கூறி இருக்கிறார். அதை பற்றி சைபர் க்ரைமில் அவர் புகார் அளித்து இருக்கிறாராம். அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.