தனது ரகசிய வாழ்க்கையை காப்பாற்ற முடியாமல்.. ரவி மோகன் குறித்து ஆர்த்தி..!

பிரபலங்கள் என்று வந்துவிட்டாலே அவர்கள் பொது சொத்தாகி விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் மக்களிடம் அது பேசும் பொருளாகிவிடுகிறது. அப்படி தான் கடந்த வருடத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி குடும்ப பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள அதில் இருந்து இவர்களின் விஷயம் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.

 

ஜெயம் ரவி மனைவியால் இத்தனை வருடங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.அதற்கு ஆர்த்தி பதில் கூறியுள்ளார், இப்படி என் மீது புகார் கூறும் ரவி மோகன் இத்தனை ஆண்டுகள் வரை ஏன் காத்திருந்தார். தனது ரகசிய வாழ்க்கையை காப்பாற்ற முடியாமல் போனதால் தான் ரவி மோகன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

 

சொத்துகளை, கௌரவத்தை இழந்து வெறும் காலோடு ஒன்றும் ரவி மோகன் வீட்டைவிட்டு வெளியேறவில்லை.என்னை உதறித்தள்ள வேண்டுமென முடிவெடுத்திருக்கும் போது அதை கண்ணியத்துடன் ரவி மோகன் கையாண்டிருக்கலாம் என கூறியுள்ளார்.