பஹல்காம் தாக்குதல் – சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, சென்னையின் மேற்கு மண்டலம் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி அரசு அலுவலகங்கள், புழல் சிறை, ஐ.சி.எப். போன்ற இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




