இன்று கொடைக்கானல் செல்கிறார் நடிகர் விஜய்..!
ஜன நாயகன் படப்பிடிப்பிற்காக வியாழக்கிழமை தவெக தலைவரும், நடிகருமான விஜய் கொடைக்கானல் செல்கிறாா். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு நடிகா் விஜய் தீவிர அரசியலில் கவனம் செலுத்திவருகிறாா்.
இந்நிலையில் தனது திரை வாழ்க்கையில் கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் நடிகா் விஜய் நடித்து வருகிறாா். அடுத்த ஆண்டு திரைப்படம் வெளியாகும் நிலையில் அதற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது. படபிடிப்பிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் விஜய் தாண்டிக்குடி மலைகிராமத்தில் தனியாா் விடுதியில் ஓய்வெடுக்கிறாா்.
பின்னா் அங்குள்ள தனியாா் தோட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெரும் படபிடிப்பில் விஜய் கலந்துகொள்கிறாா். படபிடிப்பு நடக்கும் மூன்று நாட்களும் தாண்டிக்குடியில் உள்ள தனியாா் விடுதியில் நடிகா் விஜய் தங்கியிருப்பாா் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கிய பின்னா் நடைபெரும் படபிடிப்பு என்பதால் கூடுதல் பாதுகாப்பில் படக்குழுவினா் கவனம் செலுத்திவருகின்றனா்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




