ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம் ..!
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, நாளை (1-ந்தேதி) பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




