--- --:--:-- --

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!

3

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தண்டனை வழங்கப்படும் என்று பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

 

இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. மேலும், சார்க் கூட்டமைப்பு நாட்டினருக்கான விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள், 48 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி, பிகார் மாநிலம் மதுபானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.வழக்கமாக இந்தியில் மட்டுமே பேசும் பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

 

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் விட மாட்டோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் தங்களுடன் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் மன உறுதி, பயங்கரவாதத்தை அழிக்கும் என்று குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon