கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் – எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
இந்து அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையை ஒட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் போன்று அலங்கரிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், இறந்தவரின் சமாதியில் கோபுரம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் தலைவரை மகிழ்விக்க கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துவதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி” என இந்துக்களின் நம்பிக்கைகளை திமுக இதுவரை இழிவு செய்தது போதாதா? எனக் கேள்வி எழுப்பி, சர்ச்சைக்குரிய அலங்காரத்தை நீக்கும்படி முதல்வர் உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல, நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




