பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ட்ரூடோ..!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார். ட்ரூடோ தனது இறுதி உரையில், ஏறக்குறைய 10 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்ததை பெருமையாகக் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் கொள்கைகளை குறிப்பிட்டு, தேவைப்பட்டால் நாட்டுக்காக போராடத் தயார் என்றார். சொந்தக் கட்சித் தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், ஜனவரி மாதம் அவர் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




