ரூட் தல விவகாரம்..சரமாரியாக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்..!
சென்னை பல்லவன் இல்ல பணிமனை வாயிலில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை அருகே நந்தனம் கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் ராயப்பேட்டை புது கல்லூரி மாணவர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





