--- --:--:-- --

மனைவி தனஸ்ரீயை விவாகரத்து செய்தார் யுஸ்வேந்திர சாஹல்..!

4

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீயை விவாகரத்து செய்தார்.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2020ஆம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

ஆனால் இவர்கள் இருவருக்கும் மோதல் நீடித்து வருவதாகவும், பிரிந்து வாழ்வதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் ரசிகர்களும், சஹல் தனஸ்ரீயை விவாகரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ ஜோடி விவாகரத்து கோரி மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

 

இந்த வழக்கில் சட்டரீதியான நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் விவகாரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவருக்கும் இடையே இணக்கம் இல்லாததால் கடந்த 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த ஜோடி தற்போது பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon