--- --:--:-- --

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

3

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் அப் என்ற நிகழ்ச்சியில் முதலீட்டாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு அந்த நிகழ்ச்சியில் சாதிக்க துடித்துக் கொண்டிருக்கும் தொழில் முனைவர்களுக்கு கீர்த்தி சுரேஷ் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

 

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கி வருகிறது. மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி ஹிட்டான நிகழ்ச்சிகளை பட்டி டிக்கரிங் பண்ணி தமிழில் ஒளிபரப்பு செய்து இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் ஸ்டார்ட் அப் சிங்கம் என்ற நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்தவர்கள் அல்லது தயாரித்தவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டாளர்களை பெறும் நிகழ்ச்சியாக தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு திறமை இருந்தாலும் அதை மேலும் மெருகேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கும் இளைஞர்களுக்கும், தொழில் முனைவோர்களும் கலந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.

 

அவர்களுக்கு முதலீட்டாளராக வந்த கீர்த்தி சுரேஷ் அது நல்ல ஐடியா என்று ஏற்றுக்கொள்கிறார். பிறகு அவர்கள் 100 கோடி இதற்கு வால்யூ என்று அந்த இளைஞர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீர்த்தி சுரேஷ் இது எனக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது என்று 70 கோடிக்கு பிசினஸ் டீலிங் முடித்திருக்கிறார்.

 

அதற்கு அட்வான்ஸ் ஆக இரண்டு கோடியே 80 லட்சத்தில் நிகழ்ச்சியில் கொடுத்திருக்கிறார்.அப்போது அந்த தொழில் முனைவோர்கள் எங்களுக்கு இது குறைவான அமௌண்டாக இருந்தாலும் கீர்த்தி சுரேஷின் வேல்யூ எங்களுக்கு தெரியும் அதனால் நாங்கள் இதற்கு சம்மதிக்கிறோம் என்று அவர்களும் இதற்கு உடன்பட்டு இருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon