--- --:--:-- --

காங். மூத்த தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு

1

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு வயிறு சம்பந்தமான உபாதை ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

இந்நிலையில் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் நிறைவடைந்து இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon