--- --:--:-- --

நெல்லை, தூத்துக்குடிக்கு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை..!

12

அய்யா வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்பட்ட தினம் வைகுண்ட அவதார தினமாக மார்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

 

இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும், அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் அன்று மூடப்பட்டிருக்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon