தோழர்களுடன் சுற்றுலா சென்ற பெண் டாக்டர் நதியில் மூழ்கி பலி..!
துங்கபத்ரா நதியில் 25 அடி உயர பாறையில் இருந்து குதித்து பெண் டாக்டர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த இவர் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு தனது தோழர்களுடன் சுற்றுலா வந்திருந்தவர் துங்கபத்ரகா நதியின் 20 அடி உயர பாறையில் இருந்து குதித்து நீரில் மூழ்கி மாயமானார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரைத் தேடும் பணி தொடர்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





