--- --:--:-- --

ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த பெண்..கொலையா? தற்கொலையா?

5

கோவையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த பெண் உடலை கைப்பற்றி போலீசார் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோவை மாவட்டத்தில் பணியில் இருந்த மேலாளர் வெங்கடேஷிடம் தாங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் தங்கள் பெயர் இப்ராஹீம் பாதுஷா, சம்சாத் பேகம் என சொல்லி அறையை புக் செய்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அந்த ஆண் பணம் எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார்.

 

நீண்ட நேரமாகியும் அவர் ஹோட்டலுக்கு திரும்பவில்லை. மேலும் அந்த பெண்ணின் அறை திறக்காமல் இருந்தால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

 

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணின் பெயர் சம்ஷாத் பேகம் தானா அவருடன் வந்தவர் யார் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon