கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..ஆய்வக பணியாளர் தற்காலிக நீக்கம்..!
சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கல்லூரி ஆய்வக பணியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் படித்து வரும் மாணவிகள் சிலருக்கு ஆய்வகப் பணியாளர் வேலு என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை நடத்திய தண்ணீர் குழு ஆய்வக பணியாளர் மேலும் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்ததையடுத்து ஆய்வக பணியாளர் வேலுவை தற்காலிக பணிநீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் தேவி மீனா உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





