அதிமுக விவகாரத்தில் இன்று வெளியாகும் தீர்ப்பு..!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
அதிமுக உட்கட்சி உவகாரம், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இது சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி திறப்பின் கட்சி விதிகளில் திருத்தம் செய்வதில் புதிய தலைமையை தேர்வு செய்வது உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என வாதம் முன்வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் திறப்பில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமைகள் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்குகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





