--- --:--:-- --

வாகன சோதனையில் பைக்கில் இருந்த பெட்ரோல் குண்டு..!

4

கோவை மாவட்டம் செல்வபுரத்தில் வாகன சோதனையின் பொழுது இரண்டு பெட்ரோல் குண்டுகளுடன் பைக்கில் சென்ற நாசர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த நாசர் தான் வேலை செய்யும் இடத்தில் உதவியாளரான கோவை மாவட்ட பாஜக ஆன்மீக பிரிவு தலைவராக இருப்பவரிடம் 5000 ரூபாய் கடன் கேட்டதாகவும் அதனை அவர் தர மறுத்ததால் அவர் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு இருந்தாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

இவர் மீது தனியார் தியேட்டர் சிப்ஸ் கடை ஆகியவை மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் பெட்ரோல் குண்டுகளுடன் நான்காவது முறையாக நாசர் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon