--- --:--:-- --

பள்ளி குழந்தைகளுடன் தலை குப்புற கவிழ்ந்த பேருந்து..!

3

ஆத்தூர் அருகே அரசு நகர பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 6 பேர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மலைப்பகுதி வழியாக செல்ல நகர பேருந்தை ஓட்டுநர் செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பள்ளி குழந்தைகள் உட்பட 8 பேருடன் பவளப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது பள்ளிக்கட்டு பகுதியில் பிரேக் டவுன் ஆகிறது. உடனடியாக செல்வராஜ் பிரேக் பிடிக்க வேண்டி உள்ளார்.

 

ஆனால் பிரேக் பழுதாகி இருந்த காரணத்தால் மேல நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மலைப்பகுதி கீழே இறங்கியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாக பத்து அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

 

இதில் நகர பேருந்து நொறுங்கி நொறுங்கிப் போன நிலையில் அதில் பயணித்த பள்ளி குழந்தைகளான பிரியா – ராமேஸ்வரி மற்றும் நான்கு வயது குழந்தை ஸ்ரீ நிஷா சத்துணவு பணியாளர். பேருந்து ஓட்டுனர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

 

இவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அரசு பேருந்து ஒன்று மலைப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon