மீண்டும் பெண் குழந்தை பிறக்கும் என பயமாக உள்ளது : நடிகர் சிரஞ்சீவி சர்ச்சை பேச்சு
நடிகர் சிரஞ்சீவி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையாகி வருகிறது. பிரம்மானந்தம் திரைப்படத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிரஞ்சீவி தனது வீட்டில் எல்லோரும் பெண்களாக இருப்பதால் சில சமயங்களில் பெண்கள் விடுதி காப்பாளராக இருப்பது போல் உள்ளதாக தெரிவித்தார்.
இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையை கொடு என்று தனது மகன் ராம்சரணிடம் கேட்டால் ஆண் குழந்தை வேண்டும், மீண்டும் பெண் குழந்தை பிறக்குமோ என்ற பயம் இருப்பதாகவும் சிரஞ்சீவி கூறியுள்ளார். சிரஞ்சீவி நகைச்சுவையாக பேசி இருந்தாலும் அவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





