--- --:--:-- --

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகப்பெருமாள்!

2

சூரபத்மனை, முருகன் சூரசம்ஹாரம் செய்யும் விழாவான கந்தசஷ்டியின் இறுதி விழா இன்று நடைபெற்றது. பல்வேறு முருகன் கோயில்களில் இந்த சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றாலும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் நிகழ்வு உலகம் முழுவதும் புகழ்பெற்றதாக இருந்துவருகிறது.

 

அந்த வகையில் கடந்த 10ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலில் யாகசாலை பூஜைகளுடன் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை முருகன் சூரசம்ஹாரம் செய்தார். கடற்கரையில் சூரபதுமனை முருகன் வதம் செய்யும் நிகழ்வு இன்று நடந்தது. கஜமுகனாய் முருகனோடு போர் புரியும் சூரபதுமனை சுவாமி தனது தாய் தந்த வெற்றிவேலால் வதம் செய்தார். வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முழக்கங்கள் விண்ணைப் பிளக்க கஜமுகனை வதம் செய்தார்.

 

இரண்டாவதாக சூரபதுமன் சிங்க தலையோடு சுவாமி ஜெயந்திநாதரோடு போர் புரிகிறார். ஆர்ப்பாட்டத்துடன் சூரன் செல்ல முருகப்பெருமாள் அமைதியாக சிங்க தலையுடன் கூடிய சூரனை வதம் செய்கிறார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். சிங்கத் தலையுடன் கூடிய சூரனை ஜெயந்திநாதரின் வெற்றிவேல் வீழ்த்தியது.

 

வெற்றிவேல் வீரவேல் முழக்கத்துடன் சுவாமி ஜெயந்திநாதர் சிங்கமுக சூரனை வதம் செய்தார். அடுத்து தன்முகத்துடன் (மனித உருவம்) சூரபதுமன் பின்னோக்கிச் செல்ல ஜெயந்திநாதர் முன்னோக்கிச் சென்று அடுத்து தன் உருவத்திலான சூரனை வதம் செய்தார். மாமரமாக சூரன் உருமாற மரத்தை இரண்டாகப் பிளந்து சூரனை தன்னோடு ஆட்கொள்கிறார் சுவாமி ஜெயந்திநாதர். சூரனை சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, சேவலை தன் கொடியிலும் மயிலை தன் வாகனமாகவும் ஆட்கொள்கிறார் கந்த பெருமான்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon