--- --:--:-- --

மறு வீட்டுக்கு சென்ற புது மாப்பிள்ளைக்கு விபரீதம்..!

8

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே நண்பர்களை பார்க்க சென்ற புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2ஆம் தேதி காசிரெட்டி பேட்டையை சேர்ந்த உதயகுமார் ஆந்திராவைச் சேர்ந்த பவித்ராவுக்கு திருமணம் நடைபெற்றது.

 

பிச்சாட்டூரில் உள்ள மணமகள் வீட்டிற்கு சென்ற உதயகுமார் நண்பர்களை பார்த்து வருவதாக கூறி பைக்கில் சென்று விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon