--- --:--:-- --

டெல்லியில் அதிமுக அலுவலகம் திறப்பு..!

2

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த கட்டிடத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் 99 ஆண்டு கால திட்டத்தை அதன் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. 25 சென்ட் நிலத்தில் மூன்று தடங்களுடன் நவீன வசதிகள் உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் டெல்லி செல்லும் அதிமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்கிக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

 

டெல்லி அலுவலகத்தில் தற்பொழுது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் கட்சி அலுவலகத்தை தொடங்கி வைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon