கணவர் இறந்ததாக கூறி மனைவி செய்த செயல்..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கணவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவர் இறந்ததாக கூறி மனைவி இறப்பு சான்று பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகுமார் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

 

கணவரின் சொத்தை அபகரிக்க திட்டமிட்ட ரேவதி பவானி காவல் கரையோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காண்பித்து தனது கணவர் இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளார்.

 

வாரிசு சான்று பெறுவதற்காக விண்ணப்பித்த பொழுது வருவாய் துறையினர் விசாரித்துள்ளனர். அப்பொழுது விஜயகுமார் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலையத்தில் புகார் அளித்ததை எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.