3 வருடமாக பணம் பறித்த போலீஸ்..காலையில் இளைஞர் எடுத்த முடிவு..!

பென்னாகரம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தனியார் விடுதி நிர்வாகிகள் மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறி ரைஸ்மில் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

பெண்ணாகரம் அருகே உள்ள புளியனூர் பகுதியை சேர்ந்த ரைஸ்மில் உரிமையாளர் முனியப்பன் மகன் புகழேந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் தர்மபுரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். அந்த காட்சிகளை ரகசிய கேமராவில் பதிவு செய்த விடுதி நிர்வாகிகள் அதனை வைக்க வேண்டிய விரட்டி பணம் பறித்ததாக தெரிகிறது. புகழேந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

ஆனால் காவல் உதவி ஆய்வாளர் இந்த வீடியோ காட்சியை பதிவை பெற்று புகழேந்தியை மிரட்டி மூன்றாண்டுகளாக பணப்பறித்து வந்துள்ளனர். கடன் வாங்கியும் வீட்டில் இருந்து நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்து வந்துள்ளார்.

 

இதனை அறிந்த குடும்பத்தினர் அவரிடம் கேட்ட பொழுது பாபா ரெட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் விடுதி நிர்வாகிகளுக்கு இதுவரை சுமார் 12 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.