பல் வலியால் பயணிகளை அலறவிட்ட இளைஞர்..!
பல் வலியால் பல்வேறு தரப்பு பயணிகளையும் பதற வைத்துள்ளார். இதன் காரணமாக 25 நிமிடங்கள் ரயில் தாமதமாக செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டது.
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று சங்கமித்ரா பயணிகள் அதிவிரைவு ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை கடந்து அரக்கோணத்தை நோக்கி வரும் பொழுது நீரஜ் குமார் என்பவர் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக துடித்துள்ளார்.
இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த ரயில்வே மருத்துவ குழுவினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ரயிலின் நடைமேடைக்கு வந்த உடனே அந்த நபரை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க முயற்சித்தனர்.
அந்த நபர் தனக்கு வயிற்று வலி இல்லை என்றும் பல் வலி தான் உள்ளது என்றும் பல் வலியால் உணவு உண்ண கஷ்டப்பட்டதாகவும் இந்த காரணத்தினால் கூறினால் ரயிலை நிறுத்த மாட்டார்கள் என்பதால் வயிற்று வலி என்று கூறியதாக தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான மருத்துவ மற்றும் காவல் குழுவினர் பல் வலிக்கான மாத்திரை குறித்து அந்த நபரை எச்சரித்து அனுப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




