--- --:--:-- --

வரும் 20ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..!

8

திய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வலியுறுத்தி வரும் 20ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

 

15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 22 சங்கங்களின் தொழில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் இருபதாம் தேதி வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

 

இது தொடர்பாக வரும் ஐந்தாம் தேதி போக்குவரத்து செயலாளரிடம் நோட்டீஸ் வழங்க இருப்பதாகவும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon