தஞ்சையில் அதிசயம்..அரிய வகை வெள்ளை காக்கா..!
பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுற்றுச்சுவரில் வெள்ளை காகம் அமர்ந்திருந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் ஒரு வீடு சுற்றுச்சுவரில் கருப்பு காகம் ஒன்றும் அதன் அருகில் வெள்ளைக் காகம் ஒன்றும் காணப்பட்டது.
இந்த வெள்ளைக்காகத்தை அந்த பகுதி மக்கள் வியந்து பார்த்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வெள்ளை காகத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





