தந்தையின் நினைவு நாளுக்கு சென்ற மகன்.. துடிதுடித்து பலி..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஊர் காவல் படையில் பணிபுரிந்த பிரதீப் குமார் தனது தந்தையை நினைவு நாளை முன்னிட்டு சொந்த ஊரான ரெண்டேடி பட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது மலையூர் அருகே பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





