பாஜகவில் 44 லட்சம் இஸ்லாமிய உறுப்பினர்கள்..!
மகாராஷ்டிராவில் ஒரு லட்சம் இஸ்லாமியர்கள் தங்களை பாஜகவில் இணைத்துள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மகாராஷ்டிராவில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இன்றுடன் உறுப்பினர் சேர்க்கை முடிவு பெறும் நிலையில் இதுவரை ஒரு கோடி பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் இஸ்லாமியர்களும் அடங்குவார்கள் என தெரிவித்து, நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் இஸ்லாமியர்கள் பாஜகவின் உறுப்பினர்களாக இணைந்திருப்பதாக கூறியுள்ளது. நாடு முழுவதும் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





