அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!

ன்று அரிட்டாப்பட்டி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு அருகே 4,984 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைத்து டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் அளித்திருந்தது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி சட்டப்பேரவையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதனையடுத்து, மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கான ஏல உத்தரவை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டி கிராம மக்கள் இன்று பாராட்டு விழா நடத்துகின்றனர்.

 

டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் ரத்தானதற்கு முழு முதற்காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கான அழைப்பிதழை அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர். இந்தப் பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரிட்டாப்பட்டி செல்கிறார்.