பள்ளத்தை சரி வர மூடாததால் சிக்கிய அரசு பேருந்து..!

திருச்சியில் களத்தில் சிக்கிய அரசு பேருந்து ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டதை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 70 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. உறையூர் அருகே சென்ற பொழுது சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது.

 

இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் jcp உதவியுடன் அரசு பேருந்து மீட்கப்பட்டது.

 

சில நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் அதில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கியதாக அந்த பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.