--- --:--:-- --

பெற்ற தந்தையை ஏமாற்றி சொத்தை பிடுங்கிக் கொண்ட மகன்..!

6

கள்ளக்குறிச்சியில் தனது பெயரிலான சொத்தை தனது மூத்த மகன் தன்னை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கோரி 70 வயது முதியவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்.

 

70 வயதான இவரது பெயரில் உள்ள 2.84 ஏக்கர் நிலத்தை இவரை ஏமாற்றிய அவரது மூத்த மகனான விபூஷன் அவரது மகன்களுக்கு சொத்துக்களை செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்துள்ளார்.

 

தற்பொழுது தன்னையும் தனது மற்ற மகன்களையும் ஏமாற்றி திருட்டுத்தனமாக பத்திரப்பதிவு செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது சொத்தை மீண்டும் தனக்கு பெற்றுத் தருமாறு முதியவர் லட்சுமணன் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon