காதலியை கரம் பிடித்தார் அஜய் ஞானமுத்து..!
இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது நீண்ட நாள் காதலியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ‘இமைக்கா நொடிகள்’, ‘டிமான்ட்டி காலனி’, ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது திருமணம் நடைபெற்றுள்ளது. விக்ரம், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் திருமண ஜோடிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




